About Me

My photo
ulagam romba chinnathu so we r going do deside fly or die .. iam chose to fly..cool

Monday, 2 August 2010

  • இந்திய மொத்த மக்கள் தொகை118 கோடி ...
  • ஒரு நாளைக்கு மரணத்தில் உதிர்பவர்கள் 62389 nos
  • ஒருநாளைக்கு உயிராக ஜனிப்பவர்கள் 86853 nos
  • காணொளி அற்ற நண்பர்கள் 682497nos.

ஒரு நாளைக்கு மரணம் எய்துபவர்கள் கண் தானம் செய்தால்...11
நாளைக்குள்
இந்தியாவில் இருள் ஒழியினை..
அகற்ற
நம்மால் முடியும் தோழர்களே !
சிந்திப்பீர்
!! -கண்தானம் செய்வோம் !
இருள்
இல்லா பாரதம் காண்போம் -கார்த்திக் நெல்லை..

Sunday, 1 August 2010


நட்பின் திரு நாள் இன்று....

மலர்கொத்துகள் குவிந்த போதும்..

மனம் ஏங்கியது நண்பனது விலாசமில்லா..

கடிதங்களை கையில் ஏந்தியபடி..

சலனமில்லா வாசிப்புகளில் சங்கமிக்கிறது!..

என் நட்பு ....

Saturday, 31 July 2010


இதுவரை உங்களை பற்றி எழுதவில்லை என்று எண்ணாதீர்கள் எம் தந்தையே
எல்லாம் எழுதும் எம் பேனா
உங்களை பற்றி எழுதாமல் போய்விடுமா...!
உங்களை பற்றி எழுதும் தருணத்தில்
எம் பேனாவின் முனையில்..!
சிறு அழுத்தம் ஏற்பட்டால் அது உங்கள் பாதம் தைத்த முள்ளாய்...!
என்உள்ளத்தை உதிர்ந்த மரமாகியிருக்கும்
எனவே
இதுவரை
எம் பேனா உங்களின்
பெருமைகளை ருசித்து ரசிக்காமல் இருந்தது...!
உம்மைப்பற்றி எழுதும் இந்த தருணத்தில்

என்னை
அறியாமல் எம் கண்ணில் தேங்கிநிற்கும்
நீரை
இந்த
காகிதம் கூட அறிந்திருக்காது...!


எமக்காக எத்தனை எத்தனை கஷ்டங்களை
அனுபவித்தீர்! உலகிற்கு உயிர் கொடுத்து அறிமுகம் செய்ததில் இருந்து இன்றுவரை...!
கல்வெட்டில் செதுக்கினால் கூட
முடிவு பெறாது எமக்காக நீ பெற்ற கஷ்டங்கள்..!
மாறாத உண்மைகளுக்கு மத்தியில் வந்து வந்து போகின்றன உங்களின் உவமைகள் மட்டுமே...!
எம் பாதம் சுமந்து நடை பழகி தந்த உங்கள் பாதங்களுக்கு எம் முதல் வணக்கம்!
எம் விரல் பிடித்து உங்கள் உயிர் எழுத்தை
எழுத வாய்த்த உங்கள் தமிழுக்கு எம் வணக்கம்...!
என்னை பள்ளிக்கூடத்துக்கு சுமந்து சென்ற உங்கள் தோள்களுக்கு எம் வணக்கங்கள்...!
தோழனுக்கு தோழனாக இருந்து
உங்கள் வாழ்கை அனைத்தையும் எமக்காக அர்ப்பணம் செய்யும் உங்கள் வாழ்க்கைக்கு எம் எம் வணக்கங்கள்...!
மனிதனுக்கு மாண்பும்,
மாணவனுக்கு
பண்பும்,
தலைவனுக்கு
தன்னம்பிக்கையும்,

கணவனுக்கு கண்ணியமும்,
இறைவனுக்கு ஈகையும்,
எவை எல்லாமுமாக, நீங்களும்....அப்பா

உங்களின் பாதம் பட்ட இடமெல்லாம்
என் கண்ணீர் துளிகள்! பனித்துளிகளாய்!
என்றும் உறைந்திருக்கும் ..!
எத்தனை
தவம் செய்தாலும்
இனி நான் எப்படி அழைப்பேன்
அப்பா என்ற மந்திரசொல்லை...!

காலம் உங்களை கரை சேர்த்திற்று..!
எம் கண்கள் இங்கே குளமாயிற்று...!
கார்த்திக் நெல்லை

Airtel Top Singer: Judges eliminate 3 singers from finals

Monday, 14 June 2010

ஹாய்! வணக்கம் ....
நேற்று ஜாக்கிசான் & ஜேடன் ஸ்மித் /பெ வில் ஸ்மித் நடிச்ச
தி கராத்தே கிட் படம் பார்த்தேன் ..

நம் மனதில் உள்ள சீனா பற்றிய பழமையான கருத்துக்களை உடைத்து எறியும் கதைக்களத்தில் சிறுவன் ஜேடன் விளையாட விட்டிருக்கிறார்கள்..



தன் தந்தை "வில் ஸ்மித் " தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி இருக்கிறாரா!-என்று கேட்டால்.. ஆம் என்றே பதில் வருகிறது ரசிகர்களிடமிருந்து...

கதைப்படி அமெரிக்க குடியுரிமை கொண்ட தாயும், மகனும், சீன நாட்டிற்கு தாயின் பணிமாற்றம் காரணமாக.. பயணிக்கிறார்கள்.. முதலில் சீனாவின் பழமைகளை ..புத்தகமார்கமாக.. படித்து மகிழும் ஜெடனின் சீனா வாழ்கை அவன் எதிர்பாராத சவாலை சந்திக்கும் களமாக இருக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான் .

ஜெடனும், அவன் அம்மாவும் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மெயின்டனன்ஸ் மேனான "ஹான்" ஆகா வரும் "ஜாக்கி" நாம் எதிர் பாரத விதமாய் சற்று வயதேறிய ஊழியர் கேரக்டர்-யில் வந்து நாம் அவரை உன்னிப்பாய் கவனிக்க வைக்கும் உள்ளோடிய சோகமான விழிகளில்.. வாழ்கிறார்..

சில நேரங்களில் சிறுவன் ஜெடனின் கேள்விகளில் தன் காமெடியை தூவுவதிலும் தன் பணியை திறம்பட செய்திருக்கிறார் ..


உதாரணமாக ஜாக்கி வீட்டின் நடுஹாலில் நிற்கும் கரை பார்த்து "ஏன் உங்க காரை இங்க பார்க் பண்ணிருக்கீங்க" என்று கேட்கும் போது -வேறெங்கும் பார்கிங் கிடைக்கவில்லை ..என்று ப்லொவ் -வில் சிரிக்கவைத்து விடுகிறார் ..

சிறுவன் ஜெடனுக்கு அவனை விட உயரமாக ஒரு கேர்ள்பிரண்ட் ..(ஹாரிப்பாட்டர் ஸ்டைலில் )" அவளது குடும்ப நண்பரின் மகனும் ஹீரோவுக்கு நிகரான கேரக்டரில் பிண்ணிபெடலேடுதிருக்கிறான்.மற்றொரு சிறுவனான ஹார்லி ..

இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் அடி பிண்ணிஎடுப்பன் ஜேடன் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம் !.அந்த அடி வாங்குகிறான் . ஏன் தமிழ் சினிமா போல ஹீரோஇன் "அவனை விடு ""அவனை விடு "எனக் கதறுகிறாள் என்று தெரியவில்லை .
அவனிடம் அடிபட்டதை மறைக்க மேக்-அப் டச் செய்து ஸ்கூல் சென்றான். அங்கும் வில்லனாக வந்து மிரட்டுகிறான்.. ஹார்லே ..
அவனிடம் மறைந்து மறைந்து செல்கையில்.. பரிதவிக்கவைக்கிறான்.

{ஒரு முக்கியமான விஷயம் ஜெடனுக்கு சீனா மொழி தெரியாது அவன் சீனா மொழி யாரிடம் பேசுகிறானோ அவர்கள் எல்லாம் அவனிடம் வட்டார மொழி பேச..வட்டார மொழி யாரிடம் பேசுகிறானோ அவர்கள் எல்லாம் அவனிடம் சீனா மொழி பேச ஒரே காமெடிதான் போங்க.. }

தன் தாயுடன் ஷாப்பிங் செல்லும் போது குங்-பூ பள்ளியை பார்த்து பரவசமடைந்து உள்ளே செல்கிறான்.. ஆனால் விதியோ! அந்த பள்ளியிலேயே.. வில்லனாகவரும் பசங்களும் ப்ளாக் பெல்ட்டுடன் கற்றுக் கொண்டிருக்க உற்சாகமிழந்து ஓடிவருகிறான். என்ன! ஏது! என்று புரியாமல் பின்னல் ஓடி வரும் அம்மாவிடம்:"எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை நான் சந்தோசமாக இல்லை"என்று உருகும் இடத்தில் ஜேடன் நடிக்கவில்லை..வாழ்ந்திருக்கிறான் .. தொடரும் ..

Thursday, 10 June 2010

பால்யங்களில் பழகியவை ...

எத்தனை முறை அப்பா அடித்தாலும் விளையாடசெல்லும் மாந்தோப்பு ....
எட்டிபிடித்தபடி ஊஞ்சலாடும் ஆலமரம் ...
சுட்டு தின்ன எடுக்கும் துக்கனாங்குருவி முட்டை....
நீந்திகரையேறும் பாளையத்து ஆற்றங்கரை ...
கண் கட்டி விளையாடும் செம்மண் தரட்டு வளை...
எச்சில்தடம் பதித்து ஆச்சி தரும் அன்பு முத்தம்...
தெருவெல்லாம் தடம் பதிக்கும் சைக்கிள்டயர் பந்தயங்கள்...
துண்டில் சிக்கி விடும் தவளைகளின் தப்பாட்டம்...
இரும்பை காந்தமாகக ரயில் பாதை காத்திருப்பு..
தோழிகளை கவர்வதற்காய் தினம் பிரக்கும் மயில் தோகை...
களிமண் கைப்பொருளாய் நான் செய்த குரலி பொம்மை..
வைக்கோல் படப்புகளில் சறுக்கி விழுந்த காயங்கள்...
கருப்பலகை காயவைக்க நான் படித்த காக்கை பாட்டு...
பொங்கல் கரும்புகளை வெட்டி தரும் பெரிய அருவா..
முதல் முதலாய்பள்ளிசெல்லும் கவலைகளின் குறுகுறுப்பு..
எத்தனை காலங்களிலும் அழியாத என் பால்யங்களில்..
பயணித்த அனுபவமும் ஒருசேர கிடைக்கிறது
அன்பு வைத்த ஆச்சியின் ஈமசடங்கின்...
ஈர விழியோர நாட்களில்...

கார்த்திக் ராஜா <நெல்லை>

இவள் கொண்ட பெண்மையில் இழக்கின்றேன் என்னை....

உன் தாவணி தூரிகைகள் மட்டும் காற்றில் நீ வரைந்த ஓவியங்களை...
சேமித்து வைத்திருக்கிறது..
கலைந்திடாது என் முகம் ...

உன் தலையணை மட்டும் நீ கண்ட கனவுகளை எல்லாம்...
சேமித்து வைத்திருக்கிறது..
கனவுதோறும் என் முகம்...

உன் குப்பைதொட்டி மட்டும் நீ கிழித்து போட்ட கிறுக்கல்களை...
சேமித்து வைத்திருக்கிறது...
கசக்கி போட்டும் காதல்கள்...

உன் இதழ்கள் மட்டும் நீ புன்னகைத்து சென்ற பொழுதுகளை....
சேமித்து வைத்திருக்கிறது....
களவாடிய பொழுதுகளாய் ...

கார்த்திக் ராஜா <நெல்லை>