ஹாய்! வணக்கம் ....
நேற்று ஜாக்கிசான் & ஜேடன் ஸ்மித் த/பெ வில் ஸ்மித் நடிச்ச
தி கராத்தே கிட் படம் பார்த்தேன் ..
நம் மனதில் உள்ள சீனா பற்றிய பழமையான கருத்துக்களை உடைத்து எறியும் கதைக்களத்தில் சிறுவன் ஜேடன் விளையாட விட்டிருக்கிறார்கள்..
தன் தந்தை "வில் ஸ்மித் " தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி இருக்கிறாரா!-என்று கேட்டால்.. ஆம் என்றே பதில் வருகிறது ரசிகர்களிடமிருந்து...
கதைப்படி அமெரிக்க குடியுரிமை கொண்ட தாயும், மகனும், சீன நாட்டிற்கு தாயின் பணிமாற்றம் காரணமாக.. பயணிக்கிறார்கள்.. முதலில் சீனாவின் பழமைகளை ..புத்தகமார்கமாக.. படித்து மகிழும் ஜெடனின் சீனா வாழ்கை அவன் எதிர்பாராத சவாலை சந்திக்கும் களமாக இருக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான் .
ஜெடனும், அவன் அம்மாவும் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மெயின்டனன்ஸ் மேனான "ஹான்" ஆகா வரும் "ஜாக்கி" நாம் எதிர் பாரத விதமாய் சற்று வயதேறிய ஊழியர் கேரக்டர்-யில் வந்து நாம் அவரை உன்னிப்பாய் கவனிக்க வைக்கும் உள்ளோடிய சோகமான விழிகளில்.. வாழ்கிறார்..
சில நேரங்களில் சிறுவன் ஜெடனின் கேள்விகளில் தன் காமெடியை தூவுவதிலும் தன் பணியை திறம்பட செய்திருக்கிறார் ..
உதாரணமாக ஜாக்கி வீட்டின் நடுஹாலில் நிற்கும் கரை பார்த்து "ஏன் உங்க காரை இங்க பார்க் பண்ணிருக்கீங்க" என்று கேட்கும் போது -வேறெங்கும் பார்கிங் கிடைக்கவில்லை ..என்று ப்லொவ் -வில் சிரிக்கவைத்து விடுகிறார் ..
சிறுவன் ஜெடனுக்கு அவனை விட உயரமாக ஒரு கேர்ள்பிரண்ட் ..(ஹாரிப்பாட்டர் ஸ்டைலில் )" அவளது குடும்ப நண்பரின் மகனும் ஹீரோவுக்கு நிகரான கேரக்டரில் பிண்ணிபெடலேடுதிருக்கிறான்.மற்றொரு சிறுவனான ஹார்லி ..
இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் அடி பிண்ணிஎடுப்பன் ஜேடன் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம் !.அந்த அடி வாங்குகிறான் . ஏன் தமிழ் சினிமா போல ஹீரோஇன் "அவனை விடு ""அவனை விடு "எனக் கதறுகிறாள் என்று தெரியவில்லை .
அவனிடம் அடிபட்டதை மறைக்க மேக்-அப் டச் செய்து ஸ்கூல் சென்றான். அங்கும் வில்லனாக வந்து மிரட்டுகிறான்.. ஹார்லே ..
அவனிடம் மறைந்து மறைந்து செல்கையில்.. பரிதவிக்கவைக்கிறான்.
{ஒரு முக்கியமான விஷயம் ஜெடனுக்கு சீனா மொழி தெரியாது அவன் சீனா மொழி யாரிடம் பேசுகிறானோ அவர்கள் எல்லாம் அவனிடம் வட்டார மொழி பேச..வட்டார மொழி யாரிடம் பேசுகிறானோ அவர்கள் எல்லாம் அவனிடம் சீனா மொழி பேச ஒரே காமெடிதான் போங்க.. }
தன் தாயுடன் ஷாப்பிங் செல்லும் போது குங்-பூ பள்ளியை பார்த்து பரவசமடைந்து உள்ளே செல்கிறான்.. ஆனால் விதியோ! அந்த பள்ளியிலேயே.. வில்லனாகவரும் பசங்களும் ப்ளாக் பெல்ட்டுடன் கற்றுக் கொண்டிருக்க உற்சாகமிழந்து ஓடிவருகிறான். என்ன! ஏது! என்று புரியாமல் பின்னல் ஓடி வரும் அம்மாவிடம்:"எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை நான் சந்தோசமாக இல்லை"என்று உருகும் இடத்தில் ஜேடன் நடிக்கவில்லை..வாழ்ந்திருக்கிறான் .. தொடரும் ..
About Me
- kartyq the rules
- ulagam romba chinnathu so we r going do deside fly or die .. iam chose to fly..cool
Monday, 14 June 2010
Thursday, 10 June 2010
பால்யங்களில் பழகியவை ...
எத்தனை முறை அப்பா அடித்தாலும் விளையாடசெல்லும் மாந்தோப்பு ....
எட்டிபிடித்தபடி ஊஞ்சலாடும் ஆலமரம் ...
சுட்டு தின்ன எடுக்கும் துக்கனாங்குருவி முட்டை....
நீந்திகரையேறும் பாளையத்து ஆற்றங்கரை ...
கண் கட்டி விளையாடும் செம்மண் தரட்டு வளை...
எச்சில்தடம் பதித்து ஆச்சி தரும் அன்பு முத்தம்...
தெருவெல்லாம் தடம் பதிக்கும் சைக்கிள்டயர் பந்தயங்கள்...
துண்டில் சிக்கி விடும் தவளைகளின் தப்பாட்டம்...
இரும்பை காந்தமாகக ரயில் பாதை காத்திருப்பு..
தோழிகளை கவர்வதற்காய் தினம் பிரக்கும் மயில் தோகை...
களிமண் கைப்பொருளாய் நான் செய்த குரலி பொம்மை..
வைக்கோல் படப்புகளில் சறுக்கி விழுந்த காயங்கள்...
கருப்பலகை காயவைக்க நான் படித்த காக்கை பாட்டு...
பொங்கல் கரும்புகளை வெட்டி தரும் பெரிய அருவா..
முதல் முதலாய்பள்ளிசெல்லும் கவலைகளின் குறுகுறுப்பு..
எத்தனை காலங்களிலும் அழியாத என் பால்யங்களில்..
பயணித்த அனுபவமும் ஒருசேர கிடைக்கிறது
அன்பு வைத்த ஆச்சியின் ஈமசடங்கின்...
ஈர விழியோர நாட்களில்...
கார்த்திக் ராஜா <நெல்லை>

இவள் கொண்ட பெண்மையில் இழக்கின்றேன் என்னை....
உன் தாவணி தூரிகைகள் மட்டும் காற்றில் நீ வரைந்த ஓவியங்களை...
சேமித்து வைத்திருக்கிறது..
கலைந்திடாது என் முகம் ...
உன் தலையணை மட்டும் நீ கண்ட கனவுகளை எல்லாம்...
சேமித்து வைத்திருக்கிறது..
கனவுதோறும் என் முகம்...
உன் குப்பைதொட்டி மட்டும் நீ கிழித்து போட்ட கிறுக்கல்களை...
சேமித்து வைத்திருக்கிறது...
கசக்கி போட்டும் காதல்கள்...
உன் இதழ்கள் மட்டும் நீ புன்னகைத்து சென்ற பொழுதுகளை....
சேமித்து வைத்திருக்கிறது....
களவாடிய பொழுதுகளாய் ...

Wednesday, 9 June 2010
மழலை சந்தங்களின் சித்தாந்தம்மில்லா
சிரிப்புகளின் சந்துகளில் சிதறி கிடக்கிறது ..
மனிதர்களின் மனக் காயங்களின் மருந்துகள் ...
இறைவன் வர முடியாத இல்லத்திற்கு இளம்
பிஞ்சுகளை வரமாக கொடுத்திருக்கிறான்..
நாத்திகவாதிகளின் இல்லங்களின் சுவர்களில்
கூட கடவுள் வரையப்படுகிறான்.. மழலைகளின்..
கிறுக்கல்கள்...
கார்த்திக் ராஜா (நெல்லை)

இந்த கரிசல் காட்டு பூக்கள் மட்டும் என்ன விதிவிலக்கா...
இதற்கும் வாசங்கள் உண்டென்பதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாது
போவதேன்..!
இவை நெருப்பை சுவாசித்து சேரை உறிஞ்சி வளர்கின்றன ..!
இவற்றிற்கு யாரும் காலை, மாலை, நீருற்றி போவதில்லை ..
பட்டம் பார்த்து உரமேற்ற யாருமில்லை .... கானல் நீர்தான்..
இவற்றின் காலை உணவானதோ...
அந்திக்குள் அதன் வாழ்கை அடங்கி போவதானால் அதன்
ஆசைகள் முடங்கி போகுதல் நியாயம் இல்லை ..
இவை பூஜைக்கு ஏறும் காலம் மட்டும் என் போர்குரல்
என்றும் ஒலித்திருக்கும்...
ஒ...ஆதவச்செம்மலே ..நீ அள்ளி விடும் அனல்காற்றை..
வர்க்கம் பாராது வாழ்வில் சேர்கும்போது... வலியார் எளியார்
பேதைமை வருவது ஏது...
நிலைகொள்ளாபூமியும் அலை கொள்ளா ஆழியும் ...
அழிந்தேதான் போகாது இவள் தன் பெண்மை
கரிசல் பூக்களாய் கேட்பாரற்று போகுமோ ...
_ கார்த்திக் ராஜா (நெல்லை)

கைக்குள் சிக்காமல் கன்னங்களை மட்டும் வருடிச்செல்லும்
கொடைக்கானல் மேகங்கள் போல் ...
என் ஸ்பரிசங்களில் சிக்காமல் பார்வைமட்டும் தந்து செல்லும்
மாயம் என்ன்... பெண்ணே !...கொடைக்கானல் மேகங்கள் போல் ...
என் ஸ்பரிசங்களில் சிக்காமல் பார்வைமட்டும் தந்து செல்லும்
பாலை தோறும் பனித்துளிகளை சேகரித்து வைத்திருக்கிறென்.
பூக்கள் மேல் உனக்கு இத்தனை கரிசனம்..
உன் நெடில் பார்வைகளில் அவை குறில் கொண்டு...
குறிஞ்சி பூக்களானது..இப்போது...
குடைகளுக்கு மழை நீர் கோலம் பூண்ட நேரம் நீ பூமிக்கு
தேவதையாய் வந்தாயோ !... நீ வெட்கித்து.. சிரிக்கும்
நேரம் எல்லாம்... சிலிர்த்து பொழிகிறது... மழை
என் மீது மட்டும் ......!
அலைகள் மேல் மிதக்கும் தக்கைபோல் உன் பார்வைகளில்..
மிதக்க விடுகிறாய்... காற்றில்..
எத்தனை மேகங்கள் என்னை கடந்து போனாலும் ....
ஒருபார்வையில் கரையவைத்து விடுகிறாய் என்னை..
வர வர தமிழ் எழுத்துகள் எல்லாம் அழகாய் போனது..
உன் பெயரை எழுதும் வேளைகளில்... அழகான
கவிதை நீ...

Subscribe to:
Posts (Atom)